ஈரான் அரசாங்கம் கடந்த வருடங்களை விட 2022-இல் 500க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட்டு உள்ளது என அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
நார்வேயை மையமாக கொண்ட மனித உரிமை ஆணையத்தின் படி ஈரான் மனிதஉரிமை ஆணையம் தரும் அறிக்கையானது 2022 இல் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டியுள்ளது, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமான விகிதமாகும் என கூறுகிறது.
இது குறித்து ஈரான் மனித உரிமைகள் இயக்குனரான மஹ்மூத் அமிரி-மொகத்தம், இதில் பலருக்கு நியாமான நீதிமன்ற விசாரணை இல்லாமல் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தண்டனைகள் சட்டபூர்வமானதாக இல்லை. என கூறியுள்ளார்.
2021 அறிக்கையில் உள்ள அனைத்து மரணதண்டனைகளிலும் 83.5 சதவீதம் (278 மரணதண்டனைகள்) அதிகாரிகளால் அறிவிக்கப்படவில்லை என்றும், அதில் குறைந்தபட்சம் 55 சதவீதம் (183 மரணதண்டனைகள்) கொலைக் குற்றங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
15 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக, 2021இல் குறைந்தது 139 மரணதண்டனைகளும் 2010 முதல் தற்போது வரையில் 3,758 க்கும் மேற்பட்ட மரணதண்டனைகளும் நீதிமன்றங்கள் வழங்கிய மரண தண்டனைகள் ஆகும்.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…