ஈரானில் 500க்கு மேற்ப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை..! 5 ஆண்டுகளில் இதுவே அதிகம்..!

Default Image

ஈரான் அரசாங்கம் கடந்த வருடங்களை விட 2022-இல் 500க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட்டு உள்ளது என அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 

நார்வேயை மையமாக கொண்ட மனித உரிமை ஆணையத்தின் படி ஈரான் மனிதஉரிமை ஆணையம் தரும் அறிக்கையானது 2022 இல் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டியுள்ளது, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமான விகிதமாகும் என கூறுகிறது.

இது குறித்து ஈரான் மனித உரிமைகள் இயக்குனரான மஹ்மூத் அமிரி-மொகத்தம், இதில் பலருக்கு நியாமான நீதிமன்ற விசாரணை இல்லாமல் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தண்டனைகள் சட்டபூர்வமானதாக இல்லை. என கூறியுள்ளார்.

2021 அறிக்கையில் உள்ள அனைத்து மரணதண்டனைகளிலும் 83.5 சதவீதம் (278 மரணதண்டனைகள்) அதிகாரிகளால் அறிவிக்கப்படவில்லை என்றும், அதில் குறைந்தபட்சம் 55 சதவீதம் (183 மரணதண்டனைகள்) கொலைக் குற்றங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

15 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக, 2021இல் குறைந்தது 139 மரணதண்டனைகளும் 2010 முதல் தற்போது வரையில் 3,758 க்கும் மேற்பட்ட மரணதண்டனைகளும் நீதிமன்றங்கள் வழங்கிய மரண தண்டனைகள் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்