நேபாளம்: காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலி…. மிண்டும் நில அதிர்வு!
நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியே சாலையில் தஞ்சம் அடைந்தனர். கட்டட இடிபாடுகளில் சிக்கிஇருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் உள்ள நேபாளம் – திபெத் எல்லையில், இன்று (ஜன.7) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இன்று காலை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகி இருந்தது. ஏற்கெனவே, நிலநடுக்கம் ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் நில அதிர்வு ரிக்டரில் 4.5ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, நேபாள – திபெத் எல்லையில் தற்போது மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியே சாலையில் தஞ்சம் அடைந்தனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமானது என்றாலும், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் 200 கி.மீ. சுற்றளவுக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.