முக்கியச் செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல்.. அல்-ஷிஃபா மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழப்பு.!

Published by
செந்தில்குமார்

கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் நடத்தியத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் இன்றுவரை தொடர்ந்து பதிலடி தாக்குதல் நடத்திவருகிறது.

இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மட்டுமே நடத்திவந்ததைத் தொடர்ந்து, ராணுவத்தின் நஹாஸ் காலாட்படை பிரிவினர் காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தினர். இதனால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசா பகுதியில் இருந்து வெளியேறினர். இந்த போருக்கு மத்தியில், ஹமாஸ் பயங்கரவாதக் குழு 200க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை சிறைபிடித்தனர்.

காசா மருத்துவமனையின் கீழ் ஹமாஸின் ரகசிய தளம்.! வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்.!

இதனால் பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை, காசா நகரத்திற்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் எதுவும் வழங்கப்படாது என்றும் இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காசாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் இறந்துள்ளனர்.

அதன்படி, மின்வெட்டு காரணமாகவும், எரிபொருள் பற்றாக்குறைக் காரணமாகவும் மருத்துவமனையில், முக்கிய மருத்துவ உபகரணங்கள் செயல்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 48 மணி நேரத்தில் மருத்துவமனையில் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும், இதில் 22 பேர் ஒரே இரவில் இறந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவில் பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பேச்சுவார்த்தை.!

மேலும், நவம்பர் 11ஆம் தேதி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நான்கு குறைமாத குழந்தைகள் உட்பட 40 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக அல்-ஷிஃபா மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரின் மீது இஸ்ரேல் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலால் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்றும் உள்ளூர் ஊடகங்கள் (வஃபா) தெரிவிக்கின்றன.  காசா சுகாதார அமைச்சகத்தின் படி, காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 12,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“ஒரு குடும்பஸ்தன் உருவாவது எப்படி?” கலக்கலாக வெளியான மணிகண்டனின் புதுப்பட ட்ரைலர் இதோ…

சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…

32 minutes ago

சண்டே ஸ்பெஷல்..! மணப்பட்டி சிக்கன் சுக்கா செய்வது எப்படி.?

சென்னை :மணப்பட்டி  சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…

44 minutes ago

புத்தக காட்சித் திருவிழா : “1,125 புத்தகங்கள் மொழிபெயர்ப்பு..” மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …

52 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : பும்ரா விளையாடுவாரா? அகர்கர் சொன்ன தகவல்!

டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…

1 hour ago

‘எடப்பாடியின் ஓட்டை படகில் விஜய் ஏற மாட்டார்’…மருது அழகுராஜ் வெளிப்படை பேச்சு!

சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி  உள்ள நிலையில்,  வரும் 2026…

2 hours ago

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…

2 hours ago