11,000-க்கும் மேற்பட்ட பயனர்களின் Netflix முடக்கம்.!
அமெரிக்கா உட்பட சில நாடுகளில் நேற்று பிற்பகல் 11,000-க்கும் மேற்பட்ட பயனர்களுக்கு நெட்ஃபிக்ஸ் நேரலை வீடியோக்களை பார்ப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையில் வெளியாகும் புதிய திரைப்படங்கள் மற்றும் நேரலை விடீயோக்கள் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸில் ஒளிபரப்பி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெட்ஃபிக்ஸ் பயனர்கள் பலர் நேற்று மதியத்திலிருந்து மாலை வரை நேரலை வீடியோக்களை பார்ப்பதில் சிக்கல்களை சந்தித்துள்ளனர்.
இந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப கோளாறுகளை கண்காணிக்கும் இணையதளமான டவுன்டெக்டரின் அறிக்கையின் படி, 11,000 க்கும் மேற்பட்ட பயனர்களுக்கு நேற்று நேரலை பார்ப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளது.
இந்த பிரச்சனை முக்கியமாக அமெரிக்க பயனர்களுக்கு தான் ஏற்பட்டது. ஆனால் பின்னர், இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற பிற நாடுகளில் உள்ள பயனர்களும் இந்த சிக்கல்களை சந்தித்துள்ளனர். சிக்கல்களை எதிர்கொண்ட பயனர்கள் புகார் செய்ததை தொடர்ந்து, நெட்ஃபிக்ஸ் நிறுவனம் இந்த சிக்கலை சரிசெய்வதாக உறுதியளித்தது.
To everyone who stayed up late, woke up early, gave up their Sunday afternoon… we are incredibly sorry that the Love is Blind Live Reunion did not turn out as we had planned. We’re filming it now and we’ll have it on Netflix as soon as humanly possible. Again, thank you and…
— Netflix (@netflix) April 17, 2023