உக்ரைன் மீது ரஷ்யா, இன்று 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்.
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகின்ற நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இன்று காலை உக்ரைன் மீது ரஷ்யா, 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச், பேஸ்புக்கில் தெரிவித்தார். உக்ரைன் தலைநகர் கீவ், உட்பட பல நகரங்களில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் மின்சாரம் முதல் மருத்துவம் வரை அனைத்து வசதிகளையும் அழித்து வருவதாக உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த வாரம், உக்ரைன் மீது ஒரேநாளில் 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அனுப்பி ரஷ்யா தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…