இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரானின் புதிய அதிபராகிறார் முஹம்மது முக்பர்?

Mohammad Mukhbar

சென்னை: ஈரானின் புதிய அதிபராக துணை ஜனாதிபதி முகமது முக்பர் பதவியேற்க உள்ளார் என தகவல் வெளியகியுள்ளது.

மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெரிய கேள்வி என்னவென்றால் ஈரானின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதுதான்.

ஒரு தகவலின்படி, ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர், புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்நாட்டு அரசியலமைப்பின்படி 50 நாள்களுக்குள் புதிய அதிபரை தேர்தெடுக்க வேண்டும். இதனால், முஹம்மது முக்பரின் பெயர் அதிபர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய ஜனாதிபதி முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் வரை, தற்காலிக ஜனாதிபதி பதவியை முஹம்மது முக்பர் ஏற்பார் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி, விமானி, பாதுகாப்புத் தலைவர், மெய்க்காப்பாளர் என அனைவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்