அமெரிக்காவில் டிப்பேகானோ கவுண்டியில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் கணினி மென்பொருள் படிப்பை பயின்று வந்துள்ளார் இந்திய மாணவர் நீல் ஆச்சார்யா. இவர் கடந்த ஞாயிற்று கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.
இதுகுறித்து அவரது தயார் கௌரி ஆச்சார்யா , தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில் , ” எங்கள் மகன் நீல் ஆச்சார்யா ஜனவரி 28ஆம் தேதி முதல் காணவில்லை, அவர் அமெரிக்காவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரை கடைசியாக தனியார் கால்டாக்சி ஓட்டுநர் பார்த்துள்ளார். ஓட்டுநர் எனது மகனை பர்டூ பல்கலைக்கழகத்தில் இறக்கிவிட்டுள்ளார். அதன் பிறகு அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எங்களுக்கு உதவவும்” என பதிவிட்டு இருந்தார்.
கடத்தப்பட்ட ஈரான் கப்பலை மீட்ட இந்திய கடற்படை..!
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் பதில் அளித்து இருந்தது. அதில், ” இந்திய தூதரகம் பர்டூ பல்கலைக்கழக அதிகாரிகளுடனும், நீல் ஆச்சார்யாவின் குடும்பத்தினருடனும் தொடர்பில் உள்ளது. தூதரகம் மூலம் சாத்தியமான அனைத்து உதவியையும் செய்யும்” என உறுதியளித்து இருந்தனர்.
இந்த நிலையில் தான், டிப்பேகானோ கவுண்டி அதிகாரி கூற்றுப்படி, 500 அலிசன் ரோடு மேற்கு லஃபாயெட் பகுதியில், இறந்த இளைஞர் உடல் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்த தகவல் வந்தவுடன், நேரடியாக சென்று பார்க்கையில், அந்த உடல் பர்டூவின் வளாகத்தில் பயின்று வந்த கல்லூரி மாணவன் நீல் ஆச்சார்யா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது எனதெரிவித்தனர் .
இதனை கல்லூரி நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது. அதில், எங்கள் மாணவர்களில் ஒருவரான நீல் ஆச்சார்யா காலமானார் என்பதை நங்கள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நீல் இழப்பால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
நீல் ஆச்சார்யா எப்படி அங்கு சென்றார், எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து டிப்பேகானோ கவுண்டி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…