உக்ரைனில் மீண்டும் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்! 2 பேர் உயிரிழப்பு, 5பேர் காயம்.!
உக்ரைனின் மீது ரஷ்யப்படைகள் மீண்டும் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யப்படைகள் கிட்டத்தட்ட 60 ஏவுகணைகளை உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. மத்திய உக்ரைனில் ஒரு குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டதில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் உக்ரைனின் இரண்டு பெரிய நகரங்களான கிய்வ் மற்றும் கார்கிவ் ஆகியவற்றில் மின்சாரம் மற்றும் நீர் சேவைகள் தடைபட்டன.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள், தங்குவதற்காக ஆழமான சுரங்கப்பாதை நிலையங்களை தேடி விரைந்தனர். உக்ரைனின் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இன்ஹாட், கூறும்போது 60 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் கூறினார், ஆனால் உக்ரைன் இராணுவம் சில ஏவுகணைகளை வீழ்த்தி அதில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.
ரஷ்யப் படைகள் கருங்கடலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், உக்ரைனின் விமானப் படையை திசை திருப்புவதற்கும் உக்ரைனை பதற்றத்தில் வைப்பதற்கும் இந்த தாக்குதல் நடத்தியுள்ளது என்று உக்ரைன் தரப்பில் கூறப்பட்டது.