மிஸ் யூ! உலகை விட்டு பிரிந்தது மீம்ஸ் அரசன் சீம்ஸ்! கண்ணீர் விடும் நெட்டிசன்கள்!
சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலாமான சீம்ஸ் என்று அழைக்கப்படும் ஷீபா இனத்தைச் சேர்ந்த பால்ட்சீ என்ற நாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது.
கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சீம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில், மருத்துவர்கள் நேற்று காலை சீம்ஸுக்கு தோராசென்டெசிஸ் அறுவை சிகிச்சை செய்தனர்.
அந்த சிகிச்சையின் போதே சீம்ஸின் உயிர் பிரிந்தது. இதற்கு நெட்டிசன்கள் வருத்தத்துடன் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.