கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் நிலை தடுமாறி விழுந்து விபத்து, 4 பேர் பலி; வெளியான வீடியோ.!
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொலம்பியா நாட்டின் குயிப்டோ என்ற பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் அதன் பணியில் இருந்தபோது, நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து தீப்பிடித்தது, இந்த விபத்தில் பெண் விமானி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண் விமானி, கொலம்பியாவின் முதல் பெண் ஹியூ விமானி என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெலிகாப்டர் விழுந்த காரணம் இன்னும் அறியப்படாததால், கொலம்பியாவின் தேசிய ராணுவம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெலிகாப்டர் விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
????ÚLTIMA HORA: Un helicóptero Bell UH-1N Twin Huey de la División de Aviación del Ejército de Colombia se accidentó en Quibdó, Chocó, dejando un saldo de cuatro muertos.
Toda la información en: https://t.co/GQQatCh4fm pic.twitter.com/wGxWqcIoiK
— WEB INFOMIL.COM (@Webinfomil) March 19, 2023