மைக்ரோசாப்ட் முடக்கம் : உலகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து.!
மைக்ரோசாப்ட் முடக்கம் : மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் பிரச்னையால், உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேர்கள் முடங்கியதால் விமான நிலையத்தில் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தகவல் தொடர்பு பிரச்னையால் 1,390 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், இந்தியாவில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பாதிப்பால் விமானம் வருகை, புறப்பாடு, பதிவு உள்ளிட்டவை முடங்கியுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, விமான போர்டிங் பாஸ்கள் கைகளால் எழுதப்படுகின்றன. கம்ப்யூட்டர்கள் வேலை செய்யாததால், மீண்டும் கைகளில் எழுதும் பழைய முறைக்கு திரும்பிய இண்டிகோ நிறுவனம். இதனை ஒருவர் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
The Microsoft / CrowdStrike outage has taken down most airports in India. I got my first hand-written boarding pass today 😅 pic.twitter.com/xsdnq1Pgjr
— Akshay Kothari (@akothari) July 19, 2024
மைக்ரோசாஃப்ட் முடங்க காரணம் என்ன?
மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்க காரணமான ‘Crowdstrike’ இயங்குதள கோளாறு கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். உடனடியாக அது சரி செய்யப்பட்டு மாற்று ஃபைல்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ள அவர், படிப்படியாக சேவைகள் சரியாகும் என்று தெரிவித்துள்ளார். Mac, Linux ஆகிய Operating System-இல் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.