Michigan: இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த மிச்சிகன் மாகாண தேர்தலில் அதிபர் ஜோ பைடனும் , முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் வெற்றி பெற்றனர். இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் இரு தலைவர்களிடையே போட்டி இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மிச்சிகன் மாகாண தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது வேட்பாளரான மரியான் வில்லியம்சனை ஜோ பிடன் தோற்கடித்தார். அதே நேரத்தில் டொனால்ட் டிரம்ப் இந்திய வம்சாவளி வேட்பாளர் நிக்கி ஹேலியை எளிதாக தோற்கடித்தார். மிச்சிகன் மாகாண தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 7 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகளை அதாவது 68.2 சதவீத வாக்காளர்களை பெற்றுள்ளார்.
அதே கட்சியின் முக்கிய போட்டியாளரான நிக்கி ஹேலி சுமார் 2 லட்சத்து 89 ஆயிரம் வாக்குகளை அதாவது 26.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். அதே சமயம், ஜனநாயக கட்சியில் ஜோ பைடன் 5 லட்சத்து 73 ஆயிரம் (80.5சதவீதம்) வாக்குகள் வாக்காளர்களை பெற்றுள்ளார். மரியான் வில்லியம்சன் 21 ஆயிரம் வாக்குகளை அதாவது 3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
மிச்சிகனில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரின் வெற்றி இம்முறை தேர்தல் மிகவும் பலவீனமாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதாக நிக்கி ஹேலி கூறியுள்ளார். தற்போது அமெரிக்காவின் இரண்டு முக்கிய கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி உள்ளது. அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் முக்கிய வேட்பாளராகவும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் முக்கிய வேட்பாளராகவும் களமிறங்கியுள்ளனர்.
தற்போது அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் உள்ளார். அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவை பெற வேண்டும் அதனால் ஒவ்வொரு மாகாணங்களில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…