அதிபர் வேட்பாளர் தேர்தல்: மிச்சிகனில் ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் வெற்றி..!

Donald Trump Joe Biden

Michigan: இன்று  (செவ்வாய்க்கிழமை) நடந்த மிச்சிகன் மாகாண தேர்தலில் அதிபர் ஜோ பைடனும் , முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் வெற்றி பெற்றனர். இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் இரு தலைவர்களிடையே போட்டி இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மிச்சிகன் மாகாண தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது வேட்பாளரான மரியான் வில்லியம்சனை ஜோ பிடன் தோற்கடித்தார். அதே நேரத்தில் டொனால்ட் டிரம்ப் இந்திய வம்சாவளி வேட்பாளர் நிக்கி ஹேலியை எளிதாக தோற்கடித்தார். மிச்சிகன் மாகாண தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 7 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகளை அதாவது 68.2 சதவீத  வாக்காளர்களை பெற்றுள்ளார்.

READ MORE- இஸ்ரேல் தூதரகம் முன்பு விமானப்படை வீரர் தீக்குளித்து தற்கொலை.!

அதே கட்சியின் முக்கிய போட்டியாளரான நிக்கி ஹேலி சுமார் 2 லட்சத்து 89 ஆயிரம் வாக்குகளை அதாவது 26.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். அதே சமயம், ஜனநாயக கட்சியில் ஜோ பைடன்  5 லட்சத்து 73 ஆயிரம் (80.5சதவீதம்) வாக்குகள் வாக்காளர்களை பெற்றுள்ளார். மரியான் வில்லியம்சன் 21 ஆயிரம் வாக்குகளை அதாவது 3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

READ MORE- பரபரக்கும் உ.பி தேர்தல்.! எதிர்க்கட்சி கொறடா ‘திடீர்’ ராஜினாமா.!

மிச்சிகனில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரின் வெற்றி இம்முறை தேர்தல் மிகவும் பலவீனமாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதாக நிக்கி ஹேலி கூறியுள்ளார். தற்போது அமெரிக்காவின் இரண்டு முக்கிய கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி உள்ளது. அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் முக்கிய வேட்பாளராகவும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் முக்கிய வேட்பாளராகவும் களமிறங்கியுள்ளனர்.

READ MORE- ரம்ஜானை முன்னிட்டு இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் தகவல்.!

தற்போது அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் உள்ளார். அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவை பெற வேண்டும் அதனால் ஒவ்வொரு  மாகாணங்களில் வாக்கு  பதிவு நடைபெற்று வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
06.11.2024 Power Cut Details
VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin
yellow alert rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar
Bengaluru