Alien: 1,000 ஆண்டுகள் பழமையான ஏலியன் சடலங்களை மக்கள் பார்வைக்கு வைத்த மெக்சிகோ அரசு!

alien corpses

மெக்சிகோவில் (செப்டம்பர் 13) நேற்று, ஏலியன்ஸ் கண்காட்சி நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில்,”மனிதர் அல்லாத” 1,000 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும், 2  ஏலியன்களின் உடல்கள் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன. இந்த ஏலியன் கண்காட்சியை நடத்தி மெக்சிகோ அரசு அனைவரின்  கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மனிதனை விட மிகச் சிறிய உடல்களை கொண்ட, கண்கள், மூக்கு மற்றும் வாய் போன்ற வெளிப்படையான முக அம்சங்களுடன் உடைய 2 ஏலியன்கள் கண்ணாடிப் பெட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த அசாதாரண நிகழ்வு அனைவரது ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

2017 ஆம் ஆண்டில் நாஸ்காவின் மணல் நிறைந்த பெருவியன் கடலோரப் பாலைவனத்தில் ஆழமான நிலத்தின் அடியில் இருந்து இந்த ‘ஏலியன்’ உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், இது மெக்ஸிகோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தால் கார்பன் ஆய்வு செய்யப்பட்டது.

 

அந்த இரண்டு ஏலியன்களும் சுருங்கிய, சிதைந்த தலைகளுடன் சிறிய உடல்களை கொண்டுள்னன. இந்த சடலங்கள் மனிதர்களிடமிருந்து 30 சதவிகிதம் வேறுபட்ட மரபணு அமைப்பைக் கொண்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்