இன்ஸ்டாகிராமில் பிழை கண்டறிந்தவருக்கு ரூ.38 லட்சம் அறிவித்தது மெட்டா நிறுவனம்
உலகில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலியான மெட்டாவின் இன்ஸ்டாகிராமில் பிழை இருப்பதைக் கண்டறிந்த, ஜெய்ப்பூர் மாணவன் நீரஜ் சர்மாவுக்கு மெட்டா நிறுவனம் பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் ரூ.38 லட்சம் அளித்தது.
சமூக வலைத்தளங்களில் தற்போது அதிக பேர் பயன்படுத்தும் செயலிகளில் இன்ஸ்டாக்ராமும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் அந்த இன்ஸ்டாகிராமில் பிறரது அக்கௌன்ட் எளிதில் ஹக் செய்யப்படும் வகையில் ஒரு பிழை இருப்பதைக் கண்டறிந்துள்ளார் நீரஜ் சர்மா.
இன்ஸ்டாகிராமில், ரீல்ஸ் வீடியோ பதிவிடும் போது அதன் தம்ப்நெயிலை மற்றொருவர் எளிதாக மாற்றி விடலாம், இதனைக் நீரஜ் சர்மா என்பவர் கடந்த டிசம்பர் மாதம் கண்டு பிடித்து, இது குறித்து உடனடியாக இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு அவர் புகார் அளித்துள்ளார்.
மேலும் நீரஜ் சர்மாவிடம் இது தொடர்பாக விளக்கம்கேட்டு இன்ஸ்டாகிராம் நிறுவனம் பதில் அனுப்பியிருந்ததாகவும், நீரஜ் சர்மா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாகவும் கூறி, இன்ஸ்டாகிராம் நிறுவனம் அவருக்கு $45,000 (இந்திய மதிப்பில் ரூ.35லட்சம்) பரிசுத்தொகை அளிப்பதாக மே மாதம் செய்தி அனுப்பியிருந்தது.
ஆனால் இன்ஸ்டாகிராம் நிறுவனம் நீரஜ் சர்மாவுக்கு ரூ.35லட்சம் கொடுப்பதற்கு 3 மாதம் காலதாமதம் ஆனதால், தற்போது குறிப்பிட்ட தொகையை விட ரூ.3 லட்சம் அதிகமாக கொடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.