சவுதி அரேபியாவை திருப்பி போட்ட பேய் மழை.. வெள்ளத்தில் மிதக்கும் மெக்கா.!
சவூதி அரேபியாவில் முக்கிய நகரங்களில் பகுதிகளின் இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது.

மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. அங்கு நேற்று ஒரே நாளில் பெய்த 49.2 மி.மீ மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
விமான நிலையம், ஹாஸ்பிட்டல்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அதிலும், பைக்கோடு வெள்ளத்தில் சிக்கிய டெலிவரி மேன் ஒருவர் மீட்கப்பட்ட பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு அங்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது. இந்த நிலையில், கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் போன்ற சூழல் உருவாகி முக்கிய சாலைகள் தடைபட்டுள்ளது. கார்கள் முழுவதுமாக வெள்ள நீரில் மூழ்கியது மற்றும் பலர் அடித்துச் செல்லப்பட்டதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Massive floods due to torrential rainfall in Mecca, Saudi Arabia ???????? (06.01.2025) pic.twitter.com/jWQGYihWCR
— Disaster News (@Top_Disaster) January 6, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025