அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வொய்ட் ஹால் நகரின் தீயணைப்புத் துறையில் பணி புரியும் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேயர் பதவி ஏலத்தில் விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த ஆக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட அதற்கான ஏலத்தில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் எனும் 7 மாதக் குழந்தை கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பதவியேற்பு விழாவில் தனது கௌரவ மேயர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.மேலும் மேயர் சார்லி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
மேலும் பதவியேற்பு விழாவில் மேயர் சார்லி சார்பாக ஃபிராங்க் என்பவர் பேசியுள்ளார்.அவர் கூறியதாவது வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் ஆகிய நான் மேயர் பதவியை உளமாற ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த மேயர் பதவிக்கு உண்மையாக இருப்பேன்.விளையாட்டு மைதானத்தில் அனைவரிடமும் கனிவாகவும் அன்போடும் இருப்பேன்.தீயணைப்பு வீரர்களுக்கு பிஸ்கட் எடுத்து செல்வேன்.எனது நாட்டை பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் வைத்து கொள்வேன்.
மேலும் இவ்வாறு நான் செய்ய எனக்கு அம்மாவும் அப்பாவும் உதவி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.மேலும் மேயர் சார்லியின் வளர்ப்பு தாய் நேன்சி மேயர் சார்லி அனைவரையும் எந்தவித பாகுபாடுமின்றி நேசிப்பார்.அனைவரின் ஒற்றுமைக்காக உழைப்பார்.
மேலும் மேக் அமெரிக்கா கைன்ட் அகைன்’ என்பதே அவருடைய அரசியல் முழக்கம்”என்று கூறியுள்ளார்.இந்நிலையில் அமெரிக்க வரலாற்றிலேயே 7 வயதில் மேயர் ஆன குழந்தை என என்ற பெயரை சார்லி பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…