பங்களாதேஷின் கட்டிடத்தில் பயங்கர குண்டுவெடிப்பு; 15 பேர் பலி.!
பங்களாதேஷின் டாக்காவில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பங்களாதேஷின் டாக்காவில் உள்ள நெரிசலான சந்தைப் பகுதியில், உள்ள கட்டிடம் திடீரென்று வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது, இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் தெளிவாகத் தெரியவில்லை, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். வெடிவிபத்தை அடுத்து ஐந்து தீயணைப்புப் பிரிவுகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் 2 பெண்களும், காயமடைந்த அனைவரும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் கமிஷனர் கந்தேகர் கோலம் ஃபரூக் தெரிவித்தார்.
மேலும் இது சதிச்செயலா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். கட்டிடத்தில் இருந்து எந்தவித தீவிபத்தும் ஏற்படவில்லை என தீயணைப்பு துறை செய்தி தொடர்பாளர் கூறினார்.