Categories: உலகம்

மாஸ் காட்டிய என்விடியா ..! ஆப்பிள், மைக்ரோசாப்ட்டை ஓரம்கட்டி அசத்தல் ..!

Published by
அகில் R

என்விடியா (Nvidia): அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெக் நிறுவனங்கள் கடந்த திங்கள்கிழமை அன்று புதிய உச்சத்தைத் தொட்டது. இதனால் நேற்றைய (ஜூன்-19) நாளின் வர்த்தகத்தின் முடிவில் உலகின் முதல் 10 நிறுவனங்களின் பட்டியலில் பெரிதளவு மாற்றம் என்பது ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த கம்பெனியாக ஆப்பிள் நிறுவனம் இருந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மைக்ரோசாப்ட் & ஆப்பிள் நிறுவனம் இரண்டும் மாறி மாறி முதல் இடம் 2-ஆம் இடம் பிடித்து வந்தனர். இதுவே இந்த 2 நிறுவனங்களுக்கு இடையே ஒரு பெரிய பனிப்போர் நிலவுவதற்கு காரணமாகவும் அமைந்தது.

இந்நிலையில், நேற்று முடிந்த வர்த்தகத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 3.3 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தாண்டி புதிய உயர்வைத் தொட்டு சாதனை படைத்தது. இதற்கு மிக முக்கிய காரணம் அமேரிக்க பங்குசந்தையில் முதலீட்டாளர்களின் அதிகப்படியான ஆதரவே ஆகும்.

டெக் உலகில் கோலூன்றி நின்று கொண்டிருக்கும் என்விடியா நிறுவனம், கடந்த 5 வருடத்தில் மட்டும் டெக் உலகில் மிக தீவிரமாக  ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதாவது என்விடியா இல்லை என்றால் டெக் உலகில் எதுவுமே நடக்காது என்பதற்கு ஏற்ப ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. அதிலும் மிக முக்கிய குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intellegence – AI) பயன்பாடு அதிகரித்த பிறகு என்விடியாவின் சிப் டிமாண்ட் பெரும் டிமாண்டில் இருந்து வருகிறது.

ஒரு வருடத்திற்கு முன்பு, என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு வெறும் 1 டிரில்லியன் டாலராகவே இருந்து வந்தது. ஆனால், இந்த ஏஐ மூலம் மட்டுமே கடந்த ஒரு வருடத்தில் சந்தை மதிப்பு  200% சதவீதம் அதிகரித்துள்ளது. நேற்று (ஜூன்-18,2024) நடந்து முடிந்த இந்த வர்த்தக நாள் முடிவில் என்விடியா நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 3.334 டிரில்லியன் டாலர்கள் ஆகும்.

இது மைக்ரோசாப்ட்-ன் மொத்த மதிப்பான 3.317 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைக் காட்டிலும் அதிகமானது ஆகும். இதன் காரணமாக கொடி கட்டி பரந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 2ம் இடத்திற்கும் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தை (3.286 டிரில்லியன் டாலர்) 3-வது இடத்திற்கும் தள்ளியுள்ளது. இதற்கு ரீடைல் முதலீட்டாளர்கள் என்விடியா நிறுவனத்திடம் அதிகப்படியான பங்குகளை வாங்கியதன் காரணமாக தான் என்விடியா சந்தை மதிப்பு தற்போது 3.334 டில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

44 minutes ago
சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…

1 hour ago
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

2 hours ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

3 hours ago

SRH vs GT: அலறவிட்ட சுப்மன் கில், சிராஜ்.., ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி அசத்தல்.!

ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…

3 hours ago

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

3 hours ago