11,000 ஊழியர்கள் பணிநீக்கம்.! மார்க் ஜூகர்பர்க் அதிரடி அறிவிப்பு.!
வருவாய் குறைந்ததால் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார் மெட்டா நிறுவனர் மார்க் ஜூகர்பர்க்.
பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூகர்பர்க், பேஸ்புக் நிறுவனத்தின் அதிரிபுதிரி வளர்ச்சியை அடுத்து வாட்சாப், இன்ஸ்டாகிராம் பக்கங்களை வாங்கி இவை அனைத்தையும் மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் ஒன்றிணைத்தார்.
இவை அனைத்தையும் மெட்டா நிறுவனத்தின் கீழ் ஒன்றிணைத்து ஒரு வருட காலத்தில் 600 பில்லியன் அளவுக்கு சரிவை அந்நிறுவனம் சந்தித்துள்ளது. இதனால், செலவுகளை சமாளிக்க வேலைக்குறைப்பு நடவடிக்கையில் மார்க் ஜூகர்பர்க் ஈடுபட்டுள்ளார்.
மெட்டா நிறுவனத்திற்கு வரும் வருவாய் குறைந்தது தொடர்பாக, முதற்கட்டமாக உலகம் எங்கும் பல்வேறு இடங்களில் வேலைபார்த்து வரும் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களில் 13 சதவீதம் ஊழியர்களாகும்.