ஆத்தாடி…12 அடி நாகப் பாம்புக்கு முத்தம் கொடுத்த நபர்…வைரலாகும் திகில் வீடியோ.!!
அமெரிக்காவைச் சேர்ந்த நிக் என்பவர் கிட்டத்தட்ட 12 அடி ராஜநாக பாம்புக்கு முத்தம் கொடுத்து அதற்கான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதில் “12 அடி ராஜனாக பாம்புக்கு முத்தம் கொடுப்பீர்களா” என கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், நிக் மிகவும் கூலாக 12 அடி நீளமுள்ள ராஜ நாகப்பாம்பை ஆற்றங்கரையில் எடுத்து, அதன் தலையை மெதுவாக தன் உதடுகளில் வைத்து முத்தமிடுகிறார். இதனை வீடியோவாக பதிவு செய்துகொண்டடிருந்த கேமராமேனை ராஜ நாகப்பாம்பு முதலில் தாக்க முயன்றதை நீங்கள் காணலாம்.
ஆனால், நிக்கின் கையில் பாம்பு அசையாமல் நிற்கிறது. நிக் ஒரு நாகப்பாம்புக்கு அச்சமின்றி முத்தம் கொடுக்கும் இந்த வீடியோ சமூக தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த காணொளி பார்ப்பவர்களின் இதயத்தை பதற வைக்கிறது என்று கூட கூறலாம்.
மேலும், நிக் ஒரு நிபுணர் பாம்புகளை கையாளுபவர். இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்ட சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். நிக்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு வகையான பாம்புகளின் படங்கள் மற்றும் வீடியோக்கள் நிறைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram