பிரேசிலின் அதிபராக, லூலா டா சில்வா 3-வது முறையாக பதவியேற்பு.!
77 வயதான லூலா 3-வது முறையாக, பிரேசிலின் அதிபராகப் பதவியேற்றுள்ளார்.
பிரேசிலின் 39வது அதிபராக 77 வயதான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, நேற்று பதவியேற்றார். இடதுசாரியான லுலா டா சில்வா, மூன்றாவது முறையாக பிரேசிலின் அதிபராகப் பதவியேற்றார்.
பிரேசிலின் முன்னாள் அதிபர், ஜெய்ர் பொல்சனேரோவின் துப்பாக்கி கட்டுப்பாட்டை தளர்த்தும் உத்தரவை திரும்ப பெறுவதாகவும், முந்தைய நிர்வாகத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை சரிசெய்வதாகவும் லுலா தெரிவித்தார்.