சீனா : சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் 80 வயது முதியவர் ஒருவர் 23 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திரு லீ (80) என்ற முதியவர் முதியோர் இல்லத்தில் பணிபுரியும் இளம் பெண்ணான சியாஃபங் (23) மீது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இருவரும் முதலில் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த நிலையில், இறுதியில் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து திருமணம் செய்துகொண்டார்கள். காதலித்ததை தொடர்ந்து சியாஃபங் வீட்டில் கல்யாண பேச்சுவார்தையும் நடந்து இருக்கிறது. ஆனால், இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர்கள் திரு லீ வயதை காரணம் காட்டி திருமணம் செய்து கொடுக்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும், திரு லீ மீது உள்ள அளவு கடந்த காதல் காரணத்தால் எனக்கு குடும்பவே வேண்டாம் அவர் தான் வேண்டும் என கூறி குடும்பத்தை தூக்கி எரிந்துவிட்டு சியாஃபங் ஆசைப்பட்ட படி, திரு லீயை ஒரு எளிய விழாவில் வைத்து திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளதாக சீன இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஜோடியின் பல ‘காதல் நிறைந்த’ புகை படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில், பலரும் “காதலுக்கு வயதில்லை ” என வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒரு பக்கம் பணத்திற்காக ஒரு வயதானவரை திருமணம் செய்து கொண்டதாக பலர் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதே நேரத்தில் பலர் பெண்ணின் தைரியம் மற்றும் லி மீதான அன்பைப் பாராட்டியும் வருகிறர்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…