Categories: உலகம்

உலகின் மிக அழகான மம்மி என்று அழைக்கப்படும் 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சிறுமி..

Published by
Dhivya Krishnamoorthy

ரோசாலியா லோம்பார்டோ, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த இரண்டு வயது குழந்தை. ரோசாலியா தனது இரண்டாவது பிறந்தநாளுக்கு முன், டிசம்பர் 2, 1920 அன்று நிமோனியா நோயால் இறந்தார்.  இவர் தான் உலகின் மிக அழகான மம்மி என்று கூறப்படுகிறது.

ஒரு கண்ணாடி சவப்பெட்டியில் ரோசாலியாவின் உடல் பாதுகாக்கப்பட்டு இத்தாலியின் வடக்கு சிசிலியில் உள்ள பலேர்மோவின் கபுச்சின் கேடாகம்ப்ஸில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, சுற்றுச்சூழல் காரணிகளால் உடல் மோசமடைவதைத் தடுக்க கண்ணாடி பெட்டியில் நைட்ரஜன் நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

ரோசாலியாவின் உடல் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் குறிப்பிடத்தக்க வகையில் பாதுகாக்கப்படுவதால் கபுச்சின் கேடாகம்ப்ஸ் ஒரு சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்  ரோசாலியாவை பார்க்க ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகிறார்கள்.

உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களை சந்திக்கும் இடமாக கருதப்படும் கபுச்சின் கேடாகம்ப்ஸில் சுமார் 8,000 சடலங்கள் மற்றும் சுமார் 1,284 மம்மிகள் உள்ளன.

Recent Posts

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

14 minutes ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

1 hour ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

2 hours ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

2 hours ago

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

13 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

13 hours ago