லித்தியம் – அயன் பேட்டரியை கண்டுபிடித்த சாதனையாளர் 100வது வயதில் காலமானார்.!
நோபல் பரிசு பெற்றவரும் லித்தியம் – அயன் பேட்டரி கண்டுபிடிப்பாளருமான ஜான் குட்எனஃப் தனது 100வது வயதில் காலமானார்.
இன்றைய ஸ்மார்ட்போன்கள் போன்ற வயர்லெஸ் எலக்ட்ரானிக் சாதனங்களை இயக்கும் லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்த அமெரிக்காவை சேர்ந்த ஜான் குட்எனஃப் (John Goodenough) தனது வயது முதிர்வு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.06.2023) காலமானார். அவருக்கு வயது 100.
இன்று நாம் அனைவரும் ஸ்மார்ட்போன்களை பெரிதும் நம்பியுள்ளோம், இன்றைய மின்னணு சாதனங்களான ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்களை இயக்கும் லித்தியம் அயன் பேட்டரிக்கு அடித்தளமிட்டவர் தான் ஜான் பி குட்எனஃப்.
குட்எனஃப் 2019 ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார். தனது 97 வயதில் வரலாற்றில் மிக வயதான நோபல் பரிசை வென்ற பெருமை பெற்று கொண்டார். பேட்டரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்த மற்ற இரண்டு விஞ்ஞானிகளுடன் இந்த மதிப்புமிக்க பரிசைப் பெற்றார்.