அமெரிக்கா முதல் தாய்லாந்து வரை… இந்த நாடுகளில் கஞ்சா குற்றமில்லை… லிஸ்ட் இதோ…
இன்று காலை ஜெர்மனியில் ஓர் புதிய சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்டதிருத்தம் தான் தற்போது உலகம் முழுக்க மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, நமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா எனும் போதை பொருளை ஜெர்மனி சட்டபூர்வமாக அனுமதிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யபட்டுள்ளது. இந்த மசோதா மூலம் வரும் ஏப்ரல் மாதம் முதல் கஞ்சா ஜெர்மனியில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இது போல பல்வேறு உலக நாடுகள் கஞ்சாவை சட்டபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து உள்ளனர். இதில், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய சர்வதேச நாடுகளும் உள்ளது என்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய உண்மை தகவலாகும்.
ஜெர்மனி – கஞ்சா கட்டுப்பாடு :
ஜெர்மனியில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவின்படி, ஒரு நபர் 25 கிராம் அளவுள்ள கஞ்சாவை பொதுவெளியிலும், 50 கிராம் அளவுள்ள கஞ்சாவை வீட்டிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், வீட்டிலும் சுய பயன்பாட்டிற்காக மூன்று கஞ்சா செடிகளை வளர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 500 பேர் கூட்டாக இணைந்து கஞ்சா குழு ஒன்றை ஆரம்பித்து, அவர்களு செந்தாமன் இடத்தில் கஞ்சாவை விளைவித்து அவர்களுக்குள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சட்ட மசோதா வழிவகை செய்துள்ளது.
ஏன் இந்த முடிவு.?
முன்பு இருந்தே, கஞ்சா பரவலாக ஜெர்மனி மக்களிடையே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் சட்டவிரோதப் பணிகள் நடைபெறுவதாகவும், மேலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் அரசுக்கு வரி வருவாய் என்பது வரிஇழப்பாக மாறுகிறது என்றும், இதனை தடுக்கவே தற்போது சட்டபூர்வமாக கஞ்சாவை எனுமதித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இருந்தும் எதிர்க்கட்சிகள் இந்த சட்ட மசோதாவை மறுபரீசீலனை செய்ய கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Read More – நவல்னியின் மனைவி, மகளை சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!
முதலிடத்தில் அமெரிக்கா :
இந்த கஞ்சாவை அதிக ஏற்றுமதி, இறக்குமதி என வணிகம் செய்யும் நாடுகளில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. இங்கு பொதுவாக கஞ்சா தடை செய்யப்பட்டு இருந்தாலும், 24 மாகாணங்களில் குறிப்பாக, கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ ஆகிய மாகாணங்களில் கஞ்சா அதிக அளவு, பொழுதுபோக்கு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வணிகம் செய்யப்பட்டு வருகிறது.
கனடா :
கனடாவில் கஞ்சா சட்டவிரோதமாக முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதன் பிறகு சட்டபூர்வமாக மாற்றப்பட்ட பின் 2019ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக அரசாங்க தகவலின் படி 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வியாபாரம் இருந்துள்ளது. அடுத்ததாக 2022ல் இதன் வருமானம் ஆண்டுக்கு 4.7 பில்லியன் அமெரிக்க டாலர் என உயரும் அளவுக்கு கஞ்சா வணிகம் உயர்ந்துள்ளது.
ஜி20 உலகம் நாடுகள் கூட்டமைப்பில் உள்ள முதல் நாடாக கஞ்சாவை அதிகாரபூர்வமாக நாடு முழுவதும் செயல்படுத்திய நாடு கனடா தான். (அமெரிக்காவில் பொதுவாக கஞ்சா தடை இருந்து வருகிறது) 2021 கணக்கின்படி இங்கு 1700க்கும் மேற்பட்ட சட்டபூர்வமாக கஞ்சா விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
ஜமைக்கா :
ஆரம்ப காலகட்டத்தில் இருந்து ஜமைக்காவில் கஞ்சா பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்போது இருந்தே இது குற்றமாக கருதப்படவில்லை என்றாலும், 2015 ஆம் ஆண்டு முதல் இங்கு கஞ்சா அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. இங்கு 15000 ஹெக்டேர் அளவுக்கு கஞ்சா பயிரிடப்பட்டு வருகிறது.
Read More – பிரேசிலில் கடும் மழை வெள்ளம்..! 8 பேர் பலி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மண்ணுக்குள் புதைந்த சோகம்
உருகுவே :
உருகுவே நாட்டின் 2013 முதல் கஞ்சா சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் :
இஸ்ரேல் நாட்டில் 2018ஆம் ஆண்டு முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் கஞ்சா பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிலி :
சிலி நாட்டில் 2015ஆம் ஆண்டு முதல் மருத்துவ பயன்பாடுக்காக மட்டும் கஞ்சா பயன்படுத்த சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது.
செக் குடியரசு :
இங்கு 2013ஆம் ஆண்டு முதல் சட்டபூர்வமாக கஞ்சா பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. அதற்கு முன்பிருந்தே இங்கே கஞ்சா வணிகம் என்பது பரவலாக நடைபெற்று வந்துள்ளது.
ஸ்பெயின் :
ஸ்பெயின் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு நபர் 100 கிராம் அளவிற்கு கஞ்சாவை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். உலகிலேயே இங்குதான் மலிவான விலையில் கஞ்சா கிடைக்கிறது.
நெதர்லாந்து :
நெதர்லாந்து 1976ஆம் ஆண்டு முதல் இங்கு கஞ்சா பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், 2023ஆம் ஆண்டில் தான் சட்டபூர்வமாக இங்கு கஞ்சா வணிகம் நடைபெற்று வருகிறது.
இத்தாலி :
இத்தாலி 2021ஆம் ஆண்டு முதல் மருத்துவ பயன்பாட்டிற்காக மட்டும் இத்தாலியில் கஞ்சா பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அர்ஜென்டினா :
அர்ஜென்டினா இங்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பரவலாக கஞ்சா பயன்படுத்தப்பட்டு வந்தாலும், கஞ்சாவை விளைபயிராக சாகுபடி செய்வதும், அதனை விளைவித்து வியாபாரம் செய்வதும் சட்டப்படி குற்றமாகும்.
லச்சம்பார்க் :
இங்கு 2023 ஆம் ஆண்டு முதல் கஞ்சா சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது நாடாக இங்கு சட்டபூர்வமாக கஞ்சா பொதுவெளியில் பயன்படுத்தப்படுகிறது.
போர்ச்சுகல் :
போர்ச்சுகளில் 2018ஆம் ஆண்டு முதல் இங்கு கஞ்சா பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கஞ்சாவை இங்கு அதிகாரபூர்வமாக விநியோகம் செய்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்கா :
தென்னாப்பிரிக்காவில் 2018ஆம் ஆண்டு முதல் சட்டபூர்வமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் பயன்படுத்த அனுமதிக்க படுகிறார்கள். இதன் மூலம் சுமார் 585 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இன்று ஆண்டு வருமானம் வருகிறது.
ஜார்ஜியா :
ஜார்ஜியா 2018ஆம் ஆண்டு முதல் இங்கு சட்டபூர்வமாக கஞ்சா பயன்பாட்டை அனுமதித்துள்ளது.
கொலம்பியா :
கொலம்பியாவில் 1994ஆம் ஆண்டு முதல் இங்கு கஞ்சா பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அது குற்றமாக கருதப்படவில்லை. 2016ஆம் ஆண்டு முதல் சட்டபூர்வமாக மருத்துவ பயன்பாட்டிற்காக மட்டும் இங்கு கஞ்சா பயன்படுத்தப்படுகிறது.
மால்டா :
2021ஆம் ஆண்டு முதல் இங்கு 18 வயதுக்கு மேற்பட்டோர் கஞ்சா பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் முதல் நாடாக கஞ்சாவை அதிகாரபூர்வமாக அறிவித்தது மால்டா. இதில் ஒருவர் வீட்டில் 50 கிராம் அளவுக்கு கஞ்சாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தாய்லாந்து :
2022ஆம் ஆண்டு முதல் முதல் தாய்லாந்தில் கஞ்சா பயன்பாடு அதிகாரபூர்வமாக மாறியது. ஆசியாவில் முதல் நாடாக கஞ்சாவை சட்டபூர்வமாக பயன்படுத்த அனுமதித்தது இங்குதான். இங்கு விளைநிலங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது. 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இதன் மூலம் வருமானம் கிடைக்கிறது.
மெக்சிகோ :
மெக்சிகோ 2021ஆம் ஆண்டு முதல் இங்கு சட்டபூர்வமாக கஞ்சா பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வருமானம் கிடைக்கிறது.
ஈக்வேடார் :
ஈக்குவடாரில் 2020ஆம் ஆண்டு முதல் இங்கு கஞ்சா பயன்பாடு சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது.
பரவலான கரணம் :
பரவலாக கணக்கிட்டு பார்த்தாலே, கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார இழப்பு, எப்படியும் சட்டவிரோதமாக கஞ்சா பயன்பாட்டில் இருக்கிறது. அதனால் அரசுக்கு வரி இழப்பு தான் ஏற்படுகிறது. அதனை சட்டபூர்வமாக மாற்றினால் அரசு வருவாய் அதிகரிக்கும் என்றே பல்வேறு நாடுகள் போதை பொருள் கஞ்சாவை நாட்டிற்குள் மருத்துவம், பொழுதுபோக்கு என்ற காரணங்களை கூறி அனுமதிக்கின்றனர்.
வலி நிவாரணி :
இந்த கஞ்சாவானது ஆரம்ப காலகட்டத்தில் வலி நிவாரணியாக, வயதானவர்கள் தங்கள் உடலில் ஏற்படும் வலியை தாங்க முடியாமல் அதற்கு ஒரு வலி நிவாரணி போல இதனை பயன்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் இந்த வலி நிவாரணி என்பது போதையாக மாறிய பின்பு தான் பல்வேறு நாடுகளில் இந்த கஞ்சா தடை செய்யப்பட்டது. ஆனால் அது தற்போது குறிப்பிட்ட அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முறையில் பல்வேறு நாடுகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில்….
இந்தியாவில் கஞ்சாவின் பயன்பாடு என்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமோ, பொழுதுபோக்கோ கஞ்சா வைத்து இருந்தாலே அது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.