ஈராக்கில் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளார்.
ஈராக்கில் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நுழைந்த சதரின் ஆதரவாளர்கள், முழக்கமிட்டும், ஆரவாரம் செய்தும், புகைப்படம் எடுத்துக்கொண்டும், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரிந்தனர்.
அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் சதரின் குழு வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்து நாடாளுமன்றத்தில் நடனமாடி பாடியுள்ளனர்.
போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுத்துள்ளனர். இலங்கையில், அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது போல, தற்போது ஈராக்கிலும் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…