இலங்கையை போன்று ஈராக்கிலும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்..! என்ன காரணம்..?

Default Image

ஈராக்கில் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர்  ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளார். 

ஈராக்கில் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர்  ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.  நாடாளுமன்றத்தில் நுழைந்த சதரின் ஆதரவாளர்கள், முழக்கமிட்டும், ஆரவாரம் செய்தும், புகைப்படம் எடுத்துக்கொண்டும், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரிந்தனர்.

அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் சதரின் குழு வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்து நாடாளுமன்றத்தில் நடனமாடி பாடியுள்ளனர்.

போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுத்துள்ளனர். இலங்கையில், அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது போல, தற்போது ஈராக்கிலும் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்