அவர் உதவியுடன் அமெரிக்காவை மீட்போம்! டிரம்பிற்கு ஆதரவாக களமிறங்கிய ஹல்க் ஹோகன்!
டொனால்ட் டிரம்ப் : அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் கலந்து கொண்ட போது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் துப்பாக்கியால் சுட்டதில் டிரம்பின் காது பகுதி காயமடைந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸை சுட்டு கொன்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து காயத்தில் இருந்த டொனால்ட் டிரம்ப் மிலுவாக்கி நகரில் நடந்த குடியரசுக் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் WWE மூலம் உலகம் முழுவது பிரபலமான வீரர் ஹல்க் ஹோனும் கலந்துகொண்டார்.
அப்போது தான், குடியரசு தேசிய மாநாட்டில் (Republican National Convention) எல்லோருடைய முன்னிலையிலும், ஹல்க் ஹோன் தன்னுடைய டிஷர்ட்டை கிழித்து டொனால்ட் டிரம்ப் உடன் சேர்ந்து அமெரிக்காவை மீட்போம் என்று கூறினார்.
இது குறித்து அவர் அங்கு பேசியதாவது ” என்னுடைய ஹீரோ என்றால் நான் டொனால்ட் டிரம்ப்பை தான் கூறுவேன். ‘கிளாடியேட்டர்’ ட்ரம்ப் உதவியுடன் நாம் அனைவரும் அமெரிக்காவை மீட்போம் என்பதை இப்போது தெரிவித்து கொள்கிறேன். என்னை பொறுத்தவரை அவர் ஒரு உண்மையான அமெரிக்கர் என்று தான் சொல்வேன்.
‘ட்ரம்ப்-ஓ-மேனியா’ மீண்டும் அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்றட்டும்” என்று கூறினார். கூறி முடித்த பிறகு WWE போட்டிகளில் விளையாடும்போதுஉடையை கிழித்தெறியும் பாணியை போல குடியரசு தேசிய மாநாட்டில் பேசிக் கொண்டிருந்தபோது, ஹல்க் ஹோகன் தான் அணிந்திருந்த சிவப்பு நிற டீசர்ட்டை கிழிந்தெறிந்தார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
I’ve seen it all now 😂@HulkHogan pic.twitter.com/vy6ei4tAMO
— Russell Brand (@rustyrockets) July 19, 2024