இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர், 2-வது முறையாக அயர்லாந்தின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
43 வயதான லியோ வரத்கர், மகாராஷ்டிராவில் உள்ள வரத் கிராமத்தைச் சேர்ந்த அசோக் வரத்கர் என்ற மருத்துவருக்கு பிறந்தார், அசோக் வரத்கர் 1960 களில் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு அயர்லாந்தைச் சேர்ந்த செவிலியராக பணிபுரிந்தவருக்கும், அசோக் வரத்கருக்கும் லியோ வரத்கர் டப்ளினில் பிறந்தார்.
வெளிப்படையாக தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என ஒத்துக்கொண்ட லியோ வரத்கர், அயர்லாந்தின் இளம் வயது தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இவர் துணைப் பிரதமர் பதவியில் இருந்து பிரதமராக பதவியேற்கிறார்.
அயர்லாந்தின் மூன்று கட்சி ஆளும் கூட்டணியில் உள்ள இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இடையே அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. வரத்கரின் ஃபைன் கேயல் மற்றும் தற்போதைய பிரதமர் மைக்கேல் மார்ட்டின் ஃபியன்னா ஃபெயில் கட்சிகளுக்கு இடையேயான சுழற்சி முறையில் பிரதமர் பதவி வழங்கப்படுகிறது.
2020 தேர்தல்களைத் தொடர்ந்து அயர்லாந்தின் பசுமைக் கட்சியுடனான கூட்டணியின் ஒரு பகுதியாக சுழற்சி முறை பிரதமர் பதவிக்கு ஒப்புக்கொண்டனர். 2017 இல் முதன்முறையாக வரத்கர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பிறகு 2020 தேர்தலில் தோல்வியுற்று துணை பிரதமரானார்.
தற்போது இரண்டாவது முறையாக அயர்லாந்துக்கு பிரதமராக லியோ வரத்கர், சனிக்கிழமை பதவியேற்கிறார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…