லெபனான் தொடர் தாக்குதல்! ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் அரபு நாடுகள்?

ஈரான் நேற்று இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு அரபு நாடுகளிடமிருந்து மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

Israel - Arab Countries

லெபனான் : நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு, ஈரானிலிருந்து சுமார் 1400 கி.மீ தொலைவிலிருந்து இஸ்ரேலின் 180 இடங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளால் (Iran ballistic missile) தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலால், இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுப்போம் என அறிவித்திருந்தது.

இந்த தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் பிரதமரும், இஸ்ரேலின் ராணுவத் தளபதியும் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்கள். அதில், முக்கிய விஷயமாக ஈரான் தவறு செய்து விட்டதாகவும், இந்த தாக்குதலுக்கு கண்டிப்பாக எதிர்த்தாக்குதல் செய்வோம் என கண்டனம் தெரிவித்தனர்.

இதனால், கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் தீவிரமடைந்தது. இப்படி இருக்கையில், பல உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எச்சரித்தனர்.  அதைத் தொடர்ந்து நேற்று ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதலுக்கு தற்போது சில நாடுகள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஈராக்-ஈரான் இடையே முட்டாளும் மோதலும் இருந்தாலும் , நேற்று நடந்த தாக்குதலுக்கு பிறகு ஈராக் போன்ற அரபு நாடுகளிடையே வரவேற்பு என்பது கிடைத்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. அதிலும், ரஷ்யா, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளைத் தவிர்த்து உள்ள மற்ற அரபு நாடுகள் அனைத்தும் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதே போல இஸ்ரேலுக்கு, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. மேலும், ஈரானுக்கு அரபு நாடுகள் ஆதரவு தெரிவிப்பதால் கடந்த, 1973-ம் ஆண்டு நடைபெற்ற இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையேயான போரைப் போல மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதில், ஈரான் மற்றும் இஸ்ரேல் என இரு நாடுகளுமே இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம், அரசியல் போன்றவற்றில் பெரும் பங்காற்றி வருகின்றனர். இதனால், இந்தியா எந்த ஒரு நாட்டிற்கும் ஆதரவு இல்லை எனவும், நடுநிலையாக அமைதியை விரும்பும் நாடகவே இருக்கும் எனவும், இந்த போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா போன்ற நடுநிலை நாடுகள் முற்படுவார்கள் எனவும்  கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்