லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : இந்தியர்கள் வெளியேற உத்தரவு!
லெபனானில் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் மேலும் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
லெபனான் : இஸ்ரேல் மற்றும் அதன் அண்டை நாடான லெபனானுக்கும் இடையே கடந்த ஒரு வருடகாலமாக தீராப்பகை முற்றி வருகிறது. அதிலும், லெபானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடுமையான தாக்குதல் என்பது நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 1500க்கும் மேற்படூர் காயம் அடைந்தனர், பலரது நிலைக் கவலைக் கிடமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்கள் நாளுக்குள் நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வந்த இஸ்ரேல் ராணுவம் தற்போது தரைவழி தாக்குதல்களை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
இதனால், மேலும் நிலைமை மோசமாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில் அங்குள்ள மக்கள் தங்களது உயிரியைக் காப்பற்றி கொள்ள அந்நாட்டை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு குடிபெயரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், லெபனானில் உள்ள இந்தியா தூதரகம் அங்கு வசித்து வரும் இந்தியர்களை வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், மறு அறிவுப்பு வரும் வரை யாரும் லெபனான் நாட்டுக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக லெபனானில் தங்கி வரும் இந்தியர்கள் சற்று கவனமாக இருக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், அங்கு இருப்பவர்கள் லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படி வலியுரித்துள்ளனர். ஒருவேளை ஏதேனும் உதவித் தேவைப்பட்டால் +96176860128 என்ற அவசரகால எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனவும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
Advisory dated 25.09.2024 pic.twitter.com/GFUVYaqgzG
— India in Lebanon (@IndiaInLebanon) September 25, 2024