குவைத் தீ விபத்து: ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு.! மொத்தம் 5 தமிழர்கள் பலி!!
குவைத் : தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் மாங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அந்த குடியிருப்பில் 195 பேர் வசித்து வந்த நிலையில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதில், இறந்தவர்களின் விவரம் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது ராமநாதபுரம் அடுத்த தென்னவனூர் பகுதியை சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலத்தில், தமிழர்கள் பலியான எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் அங்கு வீராச்சாமி மாரியப்பன், சின்னதுரை, விஜயகுமார், சிவசங்கர், கருப்பண்ணன் ராமு, பிராங்களின் ஜேம்ஸ், ரிச்சர்ட் ராய், முகமது ஷரீப் ஆகிய 8 தமிழர்கள் இருந்ததாகவும், அவர்கள் குறித்த தகவல் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
நேற்று நடந்த இந்த தீவிபத்தில் 40 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அனைவரின் உடல்களையும் ஒரே விமானத்தில் கொண்டு வரும் வகையில் இந்திய விமானப்படை விமானம் குவைத் செல்கிறது. இதனிடையே, இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக மு.க.ஸ்டாலின், “இந்த தீ விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு உதவி கிடைக்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அயலகத் தமிழர் நலத்துறையை தொடர்பு கொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்து.