குவைத் தீவிபத்து – 2 தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் உள்பட 41 பேர் பலி!

குவைத் : குவைத்தின் அகுமதி ஆளுநரகம் பகுதியில் உள்ள ஆறு மாடிக் கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 40 பேர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் 2 தமிழர்கள், 5 மலையாளிகள் உட்பட 10 இந்தியர்கள் உயிரிழந்ததாக குவைத் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டடத்தில் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் பெரும்பாலும் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. சமையலறையில் ஏற்பட்ட தீ, கட்டிடத்தின் வழியாக வேகமாக பரவி உள்ளது. பலர் உள்ளே சிக்கியதாக கூறப்படுகிறத
தீ விபத்தில் காயமடைந்த பலர், அதான், ஜாபர் மற்றும் முபாரக் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்பொழுது, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025