உலகில் முதல் நாடாக கிரிபாட்டி எனும் கிறிஸ்துமஸ் தீவில் புத்தாண்டு மலர்ந்தது.!
உலகின் முதலாவது நாடாக பசிபிக் தீவு நாடுகளில் 2025 புத்தாண்டை மக்கள் கோலாகலமாக வரவேற்றனர்.
கிரிபாட்டி: உலகமே 2025ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி (Kiribati) எனும் கிறிஸ்துமஸ் தீவில் (Christmas Island) புத்தாண்டு பிறந்தது. அங்கு 2024-ம் ஆண்டு நிறைவடைந்து, தற்பொழுது 2025ம் ஆண்டு பிறந்திருக்கிறது.
இந்நிலையில், பட்டாசு வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடன் ஆகிய புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர் கிரிபாட்டி மக்கள், இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த தீவு இந்தியாவை விட துல்லியமாக 8.5 மணி நேரம் முன்னால் உள்ளது.
இந்தியாவும் இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டை வரவேற்க மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறது. நாம் இருப்பிடம் மற்றும் நேரக் காலத்தை பொறுத்து, புத்தாண்டில் அடியெடுத்து வைப்பதற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ளது. ஒரு சில நாடுகளில் அதற்கு ஒரு நாள் கூட தாமதமாகலாம்.
கிரிபாட்டிக்குப் பிறகு, 2025 புத்தாண்டில் அடியெடுத்து வைத்த அடுத்தடுத்த நாடுகள் பசிபிக் தீவுகளான டோங்கா மற்றும் சமோவா ஆகும். இங்கெல்லாம், ஏற்கனவே, வண்ண விளக்குகள் ஒளிர, கண்ணை கவரும் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்ட தொடங்கியது.