கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து கடந்த 2023-ம் ஆண்டு அந்நாட்டின் மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார். பிரிட்டன் மன்னராக உள்ள மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் இந்த தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி செய்துள்ளது.
மன்னன் சார்லஸ் புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த நேரத்தில் அவருக்கு ஒரு வகையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. மன்னருக்கு புற்றுநோய் இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, பிரிட்டனுக்கு விரைவில் புதிய மன்னன் அறிவிக்க உள்ளதாக என்ற விவாதம் மக்களிடையே தொடங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து, சார்லஸ் மன்னரின் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைக்கு மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. மேலும், பிரிட்டன் மன்னரைப் பற்றிய வதந்திகள் பரவக் கூடாது என்பதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.!
சிகிச்சைக்குப் பிறகு, மன்னர் சார்லஸ் விரைவில் தனது பொதுப் பொறுப்புகளைத் தொடர்வார் என்றும் சிகிச்சையின் போது கூட சார்லஸ் மன்னர் அரசு தொடர்பான பணிகளையும், அவரது வழக்கமான முக்கிய ஆவணங்களையும் தொடர்ந்து கையாளுவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
மன்னர் மூன்றாம் சார்லஸ் நோய் மற்றும் சிகிச்சை குறித்து அவரது இரண்டு மகன்கள் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இளவரசர் வில்லியம் தனது தந்தையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் இளவரசர் ஹாரியும் தனது தந்தையிடம் பேசி நலம் விசாரித்துவிட்டு விரைவில் அவரும் பிரிட்டன் வர உள்ளார்.
சார்லஸ் மன்னரின் உடல்நலக்குறைவு குறித்த செய்தி வெளியானதை அடுத்து, பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…