18 ஆண்டுகால மணவாழ்க்கைக்கு பின் மனைவியை பிரிந்த கன்னட பிரதமர்..!

கனடா பிரதமராக பதவி வகித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ, திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், தனது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோவை பிரிந்துள்ளார். இவர்களுக்கு சேவியர் (15), எல்லா கிரேஸ் (14), ஹாட்ரியன் (9) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோரியைப் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்களுக்குப் பிறகு, நாங்கள் பிரியும் முடிவை எடுத்துள்ளோம் என்ற உண்மையை நானும் சோஃபியும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
எப்போதும் போல, நாங்கள் ஒருவரையொருவர் ஆழ்ந்த அன்பும் மரியாதையும் கொண்ட ஒரு நெருங்கிய குடும்பமாக இருக்கிறோம். எங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக, எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram