திடீர் டிவிஸ்ட்., மிகப்பெரிய கலிபோர்னியாவை கைப்பற்றிய கமலா ஹாரிஸ்.!
அமெரிக்க அதிபர் தேர்தலில் 54 உறுப்பினர்களை கொண்ட கலிபோர்னியா மாகாணத்தை கமலா ஹாரிஸ் கைப்பற்றினார்.
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே சிறு சிறு மாகாணங்களாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்க தொடங்கினார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தொடர் பின்னடைவை சந்தித்து வந்தார்.
இருந்தாலும், பெரிய மாகாணங்களில் வெற்றி பெற்றால் கமலா ஹாரிஸ் முன்னிலை பெரும் வாய்ப்புகள் இருந்தது. முன்னதாக, டிரம்ப் 210 எலக்டோரல் உறுப்பினர்கள் ஆதரவையும், கமலா ஹாரிஸ் 112 எலக்டோரல் உறுப்பினர்கள் ஆதரவையும் பெற்று இருந்தனர்.
தற்போது அமெரிக்காவில் மிகப்பெரிய மாகாணமான 54 எலக்டோரல் உறுப்பினர்கள் கொண்ட கலிபோர்னியா மாகாணத்தை கமலா ஹாரிஸ் கைப்பற்றி தற்போது முன்னேறியுள்ளார். தற்போதைய நிலவரப்படி கமலா ஹாரிஸ் 179 எலக்டோரல் உறுப்பினர்கள் ஆதரவுடனும், டொனால்ட் டிரம்ப் 214 உறுப்பினர்கள் ஆதரவுடனும் களத்தில் உள்ளனர்.