ஏர் இந்தியா, நேபாளம் ஏர்லைன்ஸ் விமானங்கள் கிட்டத்தட்ட மோதும் அளவிற்கு அருகில் சென்றதால் 3 கட்டுப்பாட்டாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மார்ச் 24ம் தேதி காத்மாண்டுக்கு வந்து கொண்டிருந்த நேபாள ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஏ-320 விமானமும், புதுடெல்லியிலிருந்து காத்மாண்டு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானமும் கிட்டத்தட்ட மோதும் அளவிற்கு அருகில் சென்றதாக நேபாள சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAAN) தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானம் 19,000 அடியில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது. அதே இடத்தில் நேபாள ஏர்லைன்ஸ் விமானம் 15,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இரண்டு விமானங்களும் அருகில் இருப்பதை ரேடார் கண்டறிந்த பின்னர் நேபாள ஏர்லைன்ஸ் விமானம் 7,000 அடிக்கு கீழே இறங்கியுள்ளது. இதனால் ஏற்படவிருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அமைத்துள்ளது. இந்த சம்பவத்தின் போது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் (ATCs) பொறுப்பில் இருந்த மூன்று ஊழியர்களை நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAN) இடைநீக்கம் செய்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியாவிடம் இருந்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…