அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்.! வரலாறு படைத்த கமலா ஹாரிஸ்..!
அமெரிக்கா : இந்த ஆண்டின் இறுதியில், நவம்பர் -5ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே நேரம் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டி இடுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், பைடனுக்கு 81 வயதாகும் நிலையில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதால் பல்வேறு விமர்சனங்களை அவரது கட்சிக்குள்ளயே எதிர்கொண்டார். அதிலும் குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் – ஜோ பைடன் இடையே நடந்த நேரடி விவாதத்தில் பைடன் பேசுவதற்கு தடுமாறினார். அதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பின் போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை ட்ரம்ப் என்றும் தவறுதலாக கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பங்கள் அவரது ஜனநாயக கட்சியினரிடையே ஒரு அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இதனால், ஜோ பைடன் அதிபர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் அவரது கட்சிக்குள்ளேயே எழ தொடங்கின, மாறாக தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனவும் ஜனநாயக கட்சியினரிடையே கூற தொடங்கினர்.
இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், தான் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதில், தனது கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காக மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளார்.
— Joe Biden (@JoeBiden) July 21, 2024
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்திய பெண் அதாவது கமலா ஹாரிஸின் தாயார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இதனால் முதல் கறுப்பின மற்றும் ஆசிய வம்சாவளியை சேர்ந்த பெண்மணி, அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வேட்பாளராக முதல் முறை களமிறங்கி இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.