ஜோ பைடன் vs டொனால்ட் டிரம்ப் : தொடங்கியது நேரடி விவாதம்!
அமெரிக்கா: இந்த ஆண்டின் நவம்பரில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபராக இருக்கும் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.
அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்க அரசியல் தேர்தல் களத்தில் முக்கிய அம்சங்களில் ஒன்று தான் தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்கள் நேருக்கு நேர் விவாதித்து கொள்வதாகும்.
இது அந்நாட்டு வழக்கமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் நடைபெற இருக்கும் இந்த தேர்தலின் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்ப்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்து வருகின்றனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு வாக்காளர்களிடம் ஆதரவு கேட்பார்கள். இந்த விவாதம் மொத்தம் 90 நிமிடம் நடத்தவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நேருக்கு நேர் விவாதம் செய்யும் போது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனைகளும் உண்டு. மேலும், இந்த விவாதத்தை நேரில் காண பொதுமக்கள், பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், டிரம்ப்-ஃபைடன் இருவரும் அதிபர் வேட்பாளர்களாக இதுபோல நேருக்கு நேர் விவாதம் செய்வது இது 3வது முறை ஆகும். கடந்த 2020ம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.