ஒருபோதும் ரஷ்ய அதிபருக்கு நான் தலைவணங்க மாட்டேன்.. ஜோ பைடன் சபதம்!
Joe Biden : டிரம்பை கடுமையாக தாக்கி பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒருபோதும் ரஷ்ய அதிபருக்கு நான் தலைவணங்கமாட்டேன் என்று சபதம் செய்தார்.
ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் முக்கிய வேட்பாளராகவும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் முக்கிய வேட்பாளராகவும் களமிறங்கினர்.
Read More – அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் VS டிரம்ப் தான்… ஆனா யாருக்கும் நிதி இல்லை – எலான் மாஸ்க்!
அதன்படி, அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் – டொனால்ட் டிரம்ப் இடையே தான் போட்டி எனவும் உறுதியானது. இந்த சூழலில் ஸ்டேட் ஆஃப் தி யூனியனில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டொனால்ட் டிரம்பை கடுக்கையாக தாக்கி பேசி, ரஷ்ய அதிபருக்கு நான் தலைவணங்கமாட்டேன் என்று சபதம் செய்தார்.
Read More – 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்! என்ன ஆனது தெரியுமா?
ஜோ பைடன் பேசியதாவது, அமெரிக்க ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமும், ஜனநாயகமும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு தலைகுனிந்து இருப்பார்.
Read More – புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்.! அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி.!
ஆனால், நான் ஒருபோதும் தலைவணங்கமாட்டேன் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்க ராணுவம் காசாவின் கடற்கரையில் ஒரு தற்காலிக துறைமுகத்தை நிறுவி, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது காசா கடற்கரையில் மனிதாபிமான உதவிகளை செய்யும் வகையில் தற்காலிக துறைமுகம் அமைக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.