மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்! கொந்தளித்த டொனால்ட் டிரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதை தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவில் தற்போது அதிபர் பதவியில் இருக்கும் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்தது, 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு ஆகிய வழக்குகளில் சிக்கிய காரணத்தால் அமெரிக்க நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்தது. இதனையடுத்து, ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி குற்றவாளியில் இருந்து அவரை விடுதலை செய்தார்.
பொதுவாகவே, அமெரிக்காவின் சட்டத்தைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுமன்னிப்பு வழங்கினால், எதாவது குற்ற வழக்குகளில் சிக்கிய நபரின் சிறை தண்டனையை பொதுமன்னிப்பு வழங்கி ரத்து செய்யும் அதிகாரம் உண்டு. எனவே, பைடன் மகன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் பைடனும் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி மகனை காப்பாற்றுவாரா? என எதிர்பார்க்கப்பட்டது.
இதனையடுத்து, எதிர்பார்த்ததை போலவே, அவர் தன்னுடைய மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது ” இன்று நான் என்னுடைய மகன் ஹண்டருக்கு பொது மன்னிப்பு வழங்கி அதற்கான சான்றிதழில் கையெழுத்திட்டேன். முன்னதாக நான் அதிபர் பதவியை ஏற்றபோது இது போன்ற நீதித்துறையின் முடிவுகளில் எப்போது தலையிடமாட்டேன் என சொல்லியிருந்தேன்.
ஆனால் இப்போது எதற்காக தலையிட்டு கையெழுத்திட்டேன் என்பதற்கான காரணத்தையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வைத்து மட்டும் தான் என்னுடைய மகன் மகன் ஹண்டர் மீது விசாரணை நடந்துள்ளது. என்னுடைய மகனை வைத்து என்னுடைய வேலைகளை தடைசெய்யலாம் என சிலர் முயற்சி செய்தார்கள். அதற்காக தான் என்னுடைய மகனுக்கு நான் பொது மன்னிப்பு வழங்கி இருக்கிறேன்” எனவும் ஜோ பைடன் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த டொனால்ட் டிரம்ப் ” ஜோ பைடனின் இந்த முடிவு “நீதித்துறையே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளது போல உள்ளது” எனவும் சுட்டிக்காட்டி பேசி அத்துடன் “கடந்த 2021-ஆம் ஆண்டு ஆட்சியை இழந்தபோது தன்னுடைய ஆதரவாளர்கள் ஜனவரி 6-ஆம் தேதி போராட்டம் நடத்தி தற்போது சிறையில் இருப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா? எனவும் காட்டத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றாலும் கூட அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார். எனவே, டிரம்ப்பால் இந்த மன்னிப்பை ரத்து செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
🇺🇸 | Donald Trump critica el indulto de Joe Biden a su hijo Hunter, cuestionando: “¿Incluye este perdón a los rehenes del 6 de enero, quienes llevan años encarcelados? ¡Un abuso y una burla a la justicia!” pic.twitter.com/dFwRCjPP6d
— Portal de Opinión (@portaldeopinion) December 2, 2024