போலந்து ஏவுகணை தாக்குதல் குறித்து ஜோ பைடன், நேட்டோ மற்றும் ஜி-7 தலைவர்கள் கண்டனம்.!

Default Image

போலந்தில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல், ரஷ்யா அனுப்பியிருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஜோ பைடன்.

ரஷ்யா தனது ஏவுகணைகள் போலந்து எல்லையைத் தாக்கியதை மறுத்துள்ளது, போலந்து ஊடகங்கள் மற்றும் அதிகாரிகளின் அறிக்கைகள்… நிலைமையை வேண்டுமென்றே எங்கள் பக்கம் திருப்ப முயற்சிக்கின்றனர் என்று கூறியுள்ளது.

போலந்தின் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இந்தோனேசியாவின் பாலியில், உலகத் தலைவர்களின் அவசரக் கூட்டத்தில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதற்கட்ட தகவலின்படி கிழக்கு போலந்தில் உக்ரைன் எல்லைக்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல் ரஷ்யா செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து பாலியில் ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது, விசாரணைக்கு முன்பு எதுவும் உறுதியாக சொல்லமுடியாது.

அமெரிக்கா, நேட்டோ வுடன் இணைந்து இதனை விசாரிக்கும். போலந்தில் நடந்த இந்த தாக்குதலுக்கு காரணமான விசாரணை நடத்த போலாந்துக்கு, அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று பைடன் தெரிவித்தார். போலந்து அதிபர் ஆண்ட்ரேஸ் டுடா இது குறித்து கூறும்போது, இந்த ஏவுகணையை யார் செலுத்தியது என்பது போலந்துக்கு தெரியாது, ஆனால் அது “பெரும்பாலும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.

தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என்று உறுதியானால், அது நேட்டோவின் கூட்டுப் பாதுகாப்புக் கொள்கை 5வது பிரிவின் படி, மேற்கத்திய கூட்டணியின் உறுப்பினர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது அனைவரின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு, சாத்தியமான இராணுவத்தின் மீதான விவாதங்களைத் தொடங்கும்.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தொலைபேசியில் போலந்து அதிபருடன் தொடர்பு கொண்டு உயிரிழந்தவர்கள் குறித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் உக்ரைன், போலந்து மற்றும் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தீவிரவாத ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று செலன்ஸ்கி கூறினார்.

ஒரு கூட்டு அறிக்கையில், நேட்டோ மற்றும் ஜி-7 தலைவர்கள், உக்ரைன் எல்லைக்கு அருகில் போலந்தின் கிழக்குப் பகுதியில் நடந்த வெடிப்பு பற்றி விவாதித்து விட்டு, உக்ரேனிய நகரங்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்திய காட்டுமிராண்டித்தனமான ஏவுகணை தாக்குதல்களை கண்டனம் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்