கட்டாய ராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜின்… கொண்டாட்டத்தில் BTS Army!
பிடிஎஸ்: பிரபல பாடகர் குழுவான BTS குழுவின் மூத்த உறுப்பினரான ஜின் எனப்படும் கிம் சியோக்ஜின் 2 வருடங்களுக்கு பிறகு இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தென் கொரியா நாட்டின் பிரபலன பாடகர் குழு தான் பிடிஎஸ் (BTS) எனப்படும் பாடகர் குழு. 7 பேர் கொண்ட இந்த பாடகர் குழுவில் மூத்த உறுப்பினர் தான் ஜின். உலகெங்கிலும் இந்த பாடகர் குழுவிற்கு ரசிகர்கள் உள்ளனர், அதிலும் குறிப்பாக பெண்கள் தான் இந்த பாடகர் குழுவிற்கு தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர். தென் கொரியாவின் சட்டப்படி 30 வயதிற்குள் அனைவரும் 2 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.
அதன்படி , கடந்த 2022ம் ஆண்டில், டிசம்பர்-13ம் தேதி அன்று ஜின் இராணுவத்தில் பணிபுரிய சென்றார். அதனால் உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர். மேலும், அவர் ராணுவத்திற்கு பணியாற்றுவதற்கு முன்பாக கடைசியாக அஸ்ட்ராநட் (Astronaut) எனும் பாடலை வெளியிட்டு விட்டு இராணுவம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று மீண்டும் அவர் இராணுவத்திலிருந்து திரும்பி வந்துள்ளார். அதனை தொடர்ந்து நாளை அவரது பாடல் நிகழ்ச்சி நடத்த போகிறார், அந்த பாடல் நிகழ்ச்சியில் அவரது ரசிகர்களான பிடிஎஸ் ஆர்மியை கட்டி அணைக்கஉள்ளதாக அவர் வீவர்ஸ் (Weverse) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மேலும் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.
SEOKJIN GREETING EVERYONE AND BTS MEMBERS CAME TO HIS DISCHARGE, THE WAY NAMJOON WAS PLAYING THE SAXOPHONE OMG😭😭 pic.twitter.com/OxfrHrdx6o
— Carolyne🌱⁷⁼¹ (@mhereonlyforbts) June 11, 2024