நடு வானில் பழுதடைந்த ஜெப் பெசோசின் ப்ளூ ஆரிஜின் ராக்கெட் பூமியில் விழுந்தது
திங்களன்று ஏவப்பட்ட ஜெப் பெசோசின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜினின் ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் பூமியில் விழுந்து நொறுங்கியது. இது ஜெப் பெசோசின் தலைமையிலான விண்வெளிப் பயண நிறுவனத்தின் முதல் ஏவுதல் தோல்வியைக் கண்டுள்ளது.
ராக்கெட், டெக்சாஸ் பாலைவனத்தில் மோதுவதற்கு முன்பே அதன் சரக்கு காப்ஸ்யூலை பாதுகாப்பாக பாராசூட் உதவியுடன் தரையிறங்கியது. மனிதர்கள் இன்றி புறப்பட்ட இந்த ராக்கெட் ப்ளூ ஆரிஜினின் 23 ஆவது நியூ ஷெப்பர்ட் மிஷன், மேற்கு டெக்சாஸ் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டது. இந்த மிஷன் நாசா நிதி உதவியுடன் கூடிய சோதனைகள் மற்றும் பிற பே-லோடுகளை விண்வெளியின் விளிம்பிற்கு சில நிமிடங்கள் மைக்ரோ க்ராவிட்டியில் மிதக்க அனுப்புவதை நோக்கமாகக் கொண்டது.
Booster failure on today’s uncrewed flight. Escape system performed as designed. pic.twitter.com/xFDsUMONTh
— Blue Origin (@blueorigin) September 12, 2022
ஆனால் தரையிலிருந்து 5 மைல்(8.05 கி.மீ) உயரத்திற்கு சென்ற பிறகு நியூ ஷெப்பர்ட் பூஸ்டரின் என்ஜின் எதிர்பாராத விதமாக எரிந்தது. ராக்கெட் எரிந்து பாராச்சூட் மீண்டும் தரையிறங்கும் முன் காப்ஸ்யூலின் அபார்ட் மோட்டார் சிஸ்டம் உடனடியாகத் தூண்டப்பட்டது. ஏவுதளப் பாதுகாப்பை மேற்பார்வையிடும் U.S.பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் படி குறிப்பிட்ட அபாயப் பகுதிக்குள் பூஸ்டர் என்ஜின் விபத்துக்குள்ளானது என்று அறியப்படுகிறது.
நாங்கள் ஏவுதலில் ஒரு ஒழுங்கின்மையை அனுபவித்ததாகவும், இது திட்டமிடப்படவில்லை என்றும் ஏவுதள வர்ணனை மையம் தெரிவித்தது.