ஹீல்ஸிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜப்பான் நாட்டுப் பெண்கள்! காரணம் என்ன?
தற்காலத்தில் பெண்களின் நவீன வகை காலணியாக ஹீல்ஸ் காலணி வகைகள் உள்ளது. இந்த காலணிகளை உலகில் அதிகமான பெண்கள் விரும்புகிறார்கள். அதில் பல வண்ண மாடல்கள் இருப்பதாலும், தங்களை உயரமாக காட்டிக் கொள்ளவும் பெண்கள் இதனை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சில உடல் ரீதியாக பிரச்சினைகள் வந்தாலும் பெண்கள் தற்போதும் அதிகம் விரும்பி அணிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜப்பான் நாட்டுப் பெண்கள் தங்களது அலுவலகங்களில் ஹீல்ஸ் அணிய கட்டாயப்படுத்துவதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது ஹீல்ஸ் அணிவதால் ஏற்படும் பிரச்சனைகளை பல பெண்கள் கூறியது தொடர்பாக அந்த வகை காலனிக்கு எதிராக தற்போது எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இது தொடர்பாக யூமி இஷிகாவா என்ற சமூக ஊடக பிரச்சாரம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.