ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து..! தேடுதல் மற்றும் மீட்புப் பணி தீவிரம்..!
ஜப்பானில் 10 பேரை அழைத்துச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் மியாகோஜிமா கடல் பகுதியில் 10 பேரை அழைத்துச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது. ஜப்பானின் ராணுவ ஹெலிகாப்டர் மியாகோஜிமாவைச் சுற்றியுள்ள நீரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்பொழுது, ஹெலிகாப்டர் மியாகோஜிமாவில் தரைத்தள தற்காப்புப் படைத் தளத்தை விட்டு வெளியேறிய பிறகு திடீரென கடலில் விழுந்து நொறுங்கியதில் ரேடார் கண்காணிப்பில் இருந்து காணாமல் போயுள்ளது என்று ஜப்பானிய தரை தற்காப்புப் படையின் தலைவர் ஜெனரல் யசுனோரி மொரிஷிதா கூறினார்.
இதையடுத்து, ஜப்பானிய கடலோரக் காவல்படை மற்றும் ராணுவக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் நீரில் மூழ்கிய ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்களைக் கண்டறிந்து காணாமல் போன நான்கு ஹெலிகாப்டர் பணியாளர்கள் மற்றும் ஆறு பயணிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.