அமெரிக்காவிடம் இருந்து 400 ஏவுகணைகளை வாங்கும் ஜப்பான்..! பிரதமர் ஃபுமியோ கிஷிடா
அமெரிக்காவிடம் இருந்து 400 டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகளை வாங்குவதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) தெரிவித்துள்ளார்.
ஜப்பான், அமெரிக்காவிடமிருந்து 400 டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகளை வாங்கும் என்று பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) தெரிவித்துள்ளார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, சீனா உள்ளிட்ட நாடுகளின் அச்சுறுத்தல்களைக் கண்காணித்து நாட்டின் பாதுகாப்பை தனது அரசாங்கம் பலப்படுத்துகிறது என்று கூறினார்.
மேலும் 400 யூனிட் க்ரூஸ் ஏவுகணையை வாங்குவதே நமது நாட்டின் திட்டம் என்று லோயர் ஹவுஸ் பட்ஜெட் கமிட்டியிடம் கிஷிடா கூறினார். இந்த மாத தொடக்கத்தில் பாதுகாப்பு மந்திரி யசுகாசு ஹமாடா, வரும் நிதியாண்டில் ஏவுகணைகளை வாங்க ஜப்பான் 211.3 பில்லியன் யென் ($2.09 பில்லியன்=239 கோடி) ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
சீனாவின் வளர்ந்து வரும் இராணுவம் மற்றும் அணு ஆயுதம் ஏந்திய வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை எதிர்கொண்டு ஜப்பானின் பாதுகாப்புத் திறனை விரிவுபடுத்த கிஷிடாவின் அரசாங்கம் விரும்புகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு, உக்ரைனை போல சுய ஆட்சி கொண்ட ஜனநாயக நாடான தைவானைக் கைப்பற்ற சீனா முயற்சி செய்யும் என்ற அச்சத்தையும் தூண்டியுள்ளது என்று கிஷிடா கூறினார்.